Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தை அடித்து நொறுக்கி இறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (22:35 IST)
இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது உறுதி என்பதால் இந்திய அணியினர் ஆக்ரோஷமாக விளையாடினர்

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவெடுத்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோஹித்சர்மா மற்றும் ரெய்னா அதிரடியில் இந்திய அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. ரோஹித் 89 ரன்களும், ரெய்னா 47 ரன்களும் எடுத்தனர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் ரஹிம் அதிரடியாக விளையாடினாலும் அவருக்கு கைகொடுக்க பேட்ஸ்மேன் இல்லாததால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா  வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 6 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது வரும் 16ஆம் தேதி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா இறுதிப்போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments