Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித், தவான் சதம்: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (06:40 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி எந்தவித பரபரப்பும் இன்றி நடந்தது. ஆரம்பம் முதலே ஆட்டம் இந்தியாவின் பக்கம் இருந்ததால் இந்திய அணி மிக எளிதில் பாகிஸ்தானை பந்தாடி வென்றது

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்து களத்தில் இறங்கியது. அந்த அணியின் சோயிப் மாலிக் 78 ரன்களும், சர்ஃபாஸ் அகமது 44 ரன்களூம், ஃபக்கார் ஜமாம் 31 ரன்களும் அடித்ததால் அந்த அணி  50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்தது. இந்திய தரப்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன் பின்னர் 238 ரன்கள் அடித்தால் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 210 ரன்கள் அடிக்கும் வரை ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. ரோஹித் சர்மா, தவான் ஆகிய இருவரும் 111 மற்றும் 114 ரன்கள் அடித்து சதமடித்தனர். இறுதியில் இந்திய அணி 39.3 ஒவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 238 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 100 பந்துகளில் 114 ரன்கள் அடித்த தவான் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments