Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் மாற்றமா?

Webdunia
ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (07:42 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடர் போட்டிகளில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது 
 
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் ரோஹித் சர்மாவின் அபார சதத்தால் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் இந்தியாவிற்கு வரும் வங்கதேச அணியுடன் இந்திய அணி மோத உள்ளது. வங்கதேச அணியுடன் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது 
 
வங்கதேச தொடருக்கான இந்திய அணி வரும் 24ஆம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடி வருவதால் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தெரிகிறது
 
போட்டி விபரம்:
 
நவம்பர் 3: முதல் டி20 போட்டி டெல்லி
 
நவம்பர் 7: 2வது டி20 போட்டி ராஜ்கோட்
 
நவம்பர் 10: 3வது டி20 போட்டி நாக்பூர்,
 
நவம்பர் 14: முதல் டெஸ்ட் போட்டி இந்தூர்
 
நவம்பர் 22: 2வது டெஸ்ட் போட்டி: கொல்கத்தா
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

அடுத்த கட்டுரையில்
Show comments