Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற நியூசிலாந்து: பேட்டிங் செய்து வரும் இந்திய அணி

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (08:19 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தொடங்கியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சாட்டர்த்வெயிட் பந்துவீச முடிவு செய்ததால் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீராங்கனை புனியா 4 ரன்களிலும், நட்சத்திர வீராங்கனை மந்தனா 36 ரன்களிலும் கேப்டன் கவுர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரோட்ரிக்ஸ் 35 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகிறார். இந்திய மகளிர் அணி சற்றுமுன் வரை 12 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து தரப்பில் டெவின், காஸ்பெரக் மற்றும் மயார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். ஏற்கனவே நியூசிலாந்து மகளிர் அணி இந்த தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments