Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் 6 சுற்றில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி.. த்ரிஷா சூப்பர் சதம்..!

இந்திய மகளிர் அணி
Mahendran
செவ்வாய், 28 ஜனவரி 2025 (15:26 IST)
19 வயது உட்பட்டவர்க்கான மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் இந்தியா முதல் அணியாக சூப்பர் ஆறு சுற்றுக்கு தகுதி பெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் 6 போட்டி கோலாலம்பூரில் நடந்தது. இன்றைய போட்டியில்  இந்திய மகளிர் அணி முதலில் டாஸ் வென்ற நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 208 ரன்கள் குவித்தது.
 
தொடக்க வீராங்கனை த்ரிஷா  மிக அபாரமாக விளையாடி 59 பந்துகளில் 110 ரன்கள் அடித்தார் என்பதும் இன்னொரு வீராங்கனை கமாலினி 51 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணி 14 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 58 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய மகளிர் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
அதேபோல் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலாக நடந்த சூப்பர் 6 போட்டி ஒன்றில் வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் அரை இறுதி போட்டி ஜனவரி 31 ஆம் தேதியும் இறுதிப்போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments