Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியில் இருந்தேன்.. கே எல் ராகுல் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:38 IST)
இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக கே எல் ராகுல் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற இருந்த நிலையில் கடைசி நாள் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் டிராவில் முடிந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம் கிடைத்த கே எல் ராகுல் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தனது இடத்தை உறுதி செய்துகொண்டுள்ளார்.

அணியில் இடம் கிடைத்தது பற்றி பேசிய ராகுல் ‘ கடந்த சில மாதங்களாக அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அணியில் இருந்தேன். விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் விரக்தியில் இருந்தேன். ஏனென்றால் ஒரு வீரருக்கு எப்போது மைதானத்தில் சவால்களை எதிர்கொள்வதே பிடிக்கும். இப்போது இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் முக்கியமே இல்ல..” கோலிக்கு ஆதரவாகப் பேசிய சேவாக்!

‘இன்னும் நீ செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது’ … தன் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியைப் பாராட்டிய யூசுப் பதான்!

நடராஜனை அணியில் எங்கே வைப்பதென்று சொல்லுங்கள்?.. டெல்லி அணி ஆலோசகர் பீட்டர்சன் கேட்கும் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments