Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயத்தால் கவாஜா விலகல்… ஸ்டாய்னிஸும் சந்தேகம் – என்ன செய்யப்போகிறது ஆஸ்திரேலியா ?

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (11:17 IST)
உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் அந்த அணியின் முக்கிய வீரரான கவாஜா காயம் காரணமாக விலகியுள்ளார்.

எந்த உலகக்கோப்பையிலும் இல்லாத அளவுக்கு இந்த உலகக்கோப்பையில் வீரர்கள் அதிகளவில் காயம் அடைந்து வருகின்றனர். இதனால் பல அணிகளும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அதுபோல ஆஸ்திரேலிய அணியில் தற்போது இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளனர். லீக்கின் கடைசி போட்டியில் விளையாடிய போது உஸ்மான் கவாஜாவுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

அதையடுத்து அவர் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் கடைசி விக்கெட்டுக்கு இறங்கி உடனே அவுட் ஆனார். இந்நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் தொடர்ந்து விளையாட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார். மேலும் மற்றொரு வீரரான மார்கஸ் ஸ்டாய்னஸும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments