தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் டாஸ் ஒரு தீர்க்கமான பங்கினை வகித்ததாக இந்திய கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் சதங்களால் 359 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவு காரணமாக பந்துவீசுவது மிகவும் கடினமாக இருந்ததாக கே.எல் ராகுல் கூறினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது எவ்வளவு கடினம், எவ்வளவு பனிப்பொழிவு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டால், இது அவ்வளவு கடினமான தோல்வி அல்ல. கடந்த ஆட்டத்தில் நன்றாக செய்ததாக நினைத்தோம். இன்று நடுவர்கள் பந்தை மாற்றியது நல்ல விஷயம். டாஸ் பெரிய பங்கு வகிக்கிறது, அதற்காக நான் வருந்துகிறேன்.
"பேட்டிங்கைப் பொறுத்தவரை, 350 என்பது நல்ல ஸ்கோர் தான் என்பது தெரியும், ஆனால் கூடுதலாக 20-25 ரன்கள் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தென்னாப்பிரிக்க அணி, எய்டன் மார்க்ரம் சதம் காரணமாக கடினமான இலக்கை துரத்திய சாதனை படைத்தது. இந்த வெற்றி தங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை அளிப்பதாகத் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்தார்.