Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டில் படாத பந்து… தானாக வெளியேறிய கோலி – ஓய்வறையில் அதிருப்தி !

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (08:47 IST)
நேற்றையப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கின் போது கோஹ்லியின் அவுட்டில் சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

நேற்றையப் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையைத் தக்க வைத்துள்ளது.

இந்த போட்டியின் 48 ஆவது ஓவரில் முகமது அமீர் வீசிய பவுன்சரை கோலி அடிக்க முயன்றார். ஆனால் அது கீப்பர் கைவசம் தஞ்சம் புகுந்தது. உடனே பாகிஸ்தான் அவுட்டுக்கு முறையிட நடுவரின் முடிவுக்கு முன்னரே கோஹ்லி வெளியேறினார்.

ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் படவில்லை என்றும் பேட் ஹெல்மெட்டில் பட்டதால் வந்த சத்தமாக இருக்கும் என தெளிவாகக் காட்டியது. இதனை ஓய்வறையில் இருந்த பார்த்த கோஹ்லி அதிருப்தியடைந்தார். கோஹ்லி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த போது அவுட் ஆனதால் அணியின் ஸ்கோர் குறைந்தது மட்டுமில்லாமல் 50 ஓவர்கள் அவர் நின்றிருந்தால் ஒருவேளை சதமடிக்கக் கூட அவர் முயன்றிருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments