Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக வெற்றிப் பெற்ற இந்திய கேப்டன் – தோனியைப் பின்னுக்குத் தள்ளினார் கோஹ்லி

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (12:11 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான வெற்றியால் அதிக வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமைத் தாங்கிய இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கோஹ்லி.

வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்து 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இது கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு 28 ஆவது வெற்றியாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் எனும் பெருமையை தோனியிடம் இருந்து கோஹ்லி பெற்றுள்ளார்.

தோனி 60 போட்டிகளுக்குத் தலைமை தாங்கி 27 போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார். ஆனால் கோஹ்லி 48 போட்டிகளிலேயே 28 வெற்றிகளைப் பெற்று இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோஹ்லி இந்தியாவின் டெஸ்ட் அணியின் கேப்டனாக 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அப்போது இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 7 ஆவது இடத்தில் இருந்தது. இப்போது இரண்டு ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளது.

கோஹ்லி மற்றும் தோனிக்கு அடுத்த அடுத்த இடத்தில் கங்குலி  48 போட்டிகளுக்குத் தலைமையேற்று 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments