Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி

Webdunia
புதன், 23 மே 2018 (22:41 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் குவாலிஃபையர் போட்டியில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே அடுத்த சுற்றுக்கு செல்லும் என்ற நிலையில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதியது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனால் 170 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
 
ஆரம்பத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான ரஹானே மற்றும் திரிபாதி அடித்து ஆடிய நிலையில் ஆட்டத்தின் 6வது ஓவரில் திரிபாதி அவுட் ஆனார். இருப்பினும் ரஹானே நல்ல முறையில் ஆடிகொண்டிருந்தார். இந்த நிலையில் 15வது ஓவரில் ரஹானே எதிர்பாராத வகையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் சாம்சன் அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார். இருப்பினும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தி பந்துவீசியதால் ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.
 
வெற்றி பெற்ற கொல்கத்தா அணி வரும் 25ஆம் தேதி சென்னையிடம் தோல்வி அடைந்த ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதிப்போட்டியில் சென்னையுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments