Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தை ஓட்டி அணி வீரர்களை பயமுறுத்திய தோனி – சகவீரர் சொன்ன ருசிகர தகவல்!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (16:43 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அணி வீரர்கள் மைதானத்துக்கு செல்லும்போது தானே பேருந்தை ஓட்டி அணி வீரர்களை மிரளச் செய்ததாக லஷ்மன் தெரிவித்திள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக  சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.

இந்நிலையில் அவருடனான தங்கள் இனிமையான நிகழ்வுகளை சக வீரர்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேனான விவிஎஸ் லஷ்மன் ‘2008 ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின்னர், அப்போது அணி வீரர்கள் அனைவரும் அணிக்கான பேருந்தில் சென்று கொண்டிருந்தோம்,  அப்போது பேருந்து ஓட்டுனரை அவரது சீட்டில் இருந்து நகர்த்திவிட்டு தோனியே பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார். நாக்பூர்  மைதானத்திலிருந்து ஹோட்டல் வரை தோனியே பஸ்ஸை ஓட்டினார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments