Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி இனி விக்கெட் கீப்பரும் இல்லை, பேட்ஸ்மென்னும் இல்லை: சேவாக் பளிச்!

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (13:34 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மென்னாக தோனி இனி செயல்பட முடியாது என தேர்வுக்குழு தோனியிடம் தெரிவிக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். 
 
உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி அரையிறுயோடு வெளியேறியதில் இருந்து தோனியின் ஓய்வு குறித்து பல செய்திகள் வெளியாகி வருகின்றனர். தோனி ஓய்வு குறித்து பல செய்திகள் வந்தாலும் அவர் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. 
 
ஆனால், பிசிசிஐ தோனிக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது. அவராக ஓய்வு முடிவை வெளியிட வேண்டும் என்று விரும்பும் இந்திய கிரிக்கெட் வாரியம் இனி அடுத்தடுத்த தொடர்களில் அவரை அணித்க்கு தேர்வு செய்ய வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
அப்படியே தோனி தேர்வு செய்யப்பட்டாலும் இந்திய அணியின் ஆடும் லெவனில் சேர்க்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சேவாக் தெரிவித்தாவது....
 
தோனியிடம் நிலைமையை சொல்வது தேர்வாளர்களின் கடமை. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இனி தோனி தொடர முடியாது என்பதை அவரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் அவரது ஓய்வு குறித்து அவர் முடிவு செய்யட்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments