Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை வெற்றி அடைந்தாலும் திக் திக் தான்.. ஆர்சிபி கையில் தான் பிளே ஆப் வாய்ப்பு..!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (19:29 IST)
இன்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றாலும் அந்த அணி 16 புள்ளிகள் உடன் மைனஸ் ரன் ரேட்டில் இருப்பதால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் கேமரூன் கிரீன் மிக அபாரமாக விளையாடி 100 ரன்கள் அடித்தார். 
 
இதனை அடுத்து மும்பை அணி தற்போது புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருந்தாலும் இன்று நடைபெற உள்ள பெங்களூர் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் தான் பிளே ஆப் செல்லும் நான்காவது அணி மும்பையா? அல்லது பெங்களூரா? என்பது தெரியவரும். 
 
பெங்களூர் அணி பிளஸ் ரன்ரேட்டில் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை பெங்களூர் அணி தோல்வி அடைந்தால் மும்பை தகுதி பெறுஇம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments