Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி செஞ்சுரி வீண்.. பிளே ஆப் சென்றது மும்பை..!

Webdunia
திங்கள், 22 மே 2023 (00:12 IST)
இன்று நடைபெற்ற குஜராத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதை அடுத்து மும்பை அணி நான்காவது அணியாக பிளே ஆப் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்தது. விராட் கோலி 101 ரன்கள் அடித்தார். 
 
இதனை அடுத்து 198 என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி விளையாடி நிலையில் சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். விஜய் சங்கர் 53 ரன்கள் எடுத்தார் 
 
இன்றைய போட்டியில் குஜராத் அணி வென்றதை அடுத்து 16 புள்ளிகள் பெற்ற மும்பை அணி பிளே ஆப் தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
23ஆம் தேதி நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணியும், 24ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணியும் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

நேற்றைய போட்டியில் வங்கதேச பவுலர் ஹசன் முகமத் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments