Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு புள்ளிகளில் இறுதிப் போட்டியை கோட்டைவிட்ட மும்பை

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (21:58 IST)
2019 ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டியில் லீக் போட்டிகள் முடிவடைந்து அரையிறுதி போட்டிகள் நடைபெறுகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெங்கால் மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் புள்ளிகளைப் பெற்று வந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்பதை ஊகிக்க முடியாத அளவில் இருந்தது 
 
இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் பெங்கால் அணி 37 புள்ளிகளும் மும்பை அணி 35 புள்ளிகளும் பெற்றதால் இரண்டு புள்ளிகளில் பெங்கால் அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டே புள்ளிகளில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை மும்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில்  வரும் சனிக்கிழமை பெங்கால் மற்றும் டெல்லி அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பதும், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இந்த ஆண்டின் புரோ கபடி சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments