Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலைப்பயிற்சியில் வான வேடிக்கைக் காட்டிய புஜாரா? ஆச்சர்யமான ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:39 IST)
இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் சத்தீஸ்வர் புஜாரா இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.

சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்களைக் காட்டிலும் 30 வயதைத் தாண்டிய மூத்த வீரர்களையே தங்கள் அணியில் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கேவை டாடீஸ் டீம் என கேலி செய்வது உண்டு. இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்திலும் மொயின் அலி மற்றும் புஜாரா ஆகிய மூத்த வீரர்களையே அதிகம் ஏலத்தில் எடுத்துள்ளது. அதிலும் டெஸ்ட் போட்டிகளில் சுவர் போல நின்று ஆடும் புஜாராவை எந்த அணியும் எடுக்காத போது சென்னை அணி அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டது இந்த ஆண்டுதான்.

இதையடுத்து சென்னை அணியுடன் இணைந்த அவர் இப்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வலைப்பயிற்சியின் போது ஆக்ரோஷமாக விளையாடிய புஜாரா சிக்சர்களாக பறக்கவிட்டாராம். அவரின் ஆட்டத்தை பார்த்து புஜாராவா இது என அனைவரும் ஆச்சர்யத்துக்கு ஆளாகியுள்ளனர். நவீன கால டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் சுவர் என வர்ணிக்கப்படும் புஜாராவின் டி 20 அதிரடியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது டி20 கிரிக்கெட்: வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசியும் இந்தியா தோல்வி..

AUS vs PAK ODI: சொந்த மண்ணிலேயே வீழ்ச்சி அடைந்த ஆஸ்திரேலியா! - 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சாதனை!

தோனி விரும்பும்வரை சி எஸ் கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும்… காசி விஸ்வநாதன் பேட்டி!

கம்பீருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆப்பு… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசி வாய்ப்பு – பிசிசிஐ ஆலோசனை!

என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. ஐபிஎல் எண்ட்ரி குறித்து ஆண்டர்சன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments