Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: புனே அணிக்கு மேலும் ஒரு வெற்றி

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (06:00 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் நேற்று புனே மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது

இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் அதிக புள்ளிகளை எடுத்ததால் இரு தரப்பினர்களுக்கு புள்ளி மழை பொழிந்தது. முதல் பாதியிலும் ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் யார் இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாமல் போட்டி த்ரில்லாக சென்று கொண்டிருந்தது. இதனால் பார்வையாளர்களுக்கு நேற்று செம விருந்து கிடைத்தது

இறுதியில் புனே அணி 53 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 50 புள்ளிகளும் பெற்றதை அடுத்து 3 புள்ளிகள் வித்தியாசத்தில் புனே அணி வென்றது. இந்த வெற்றி புனே அணிக்கு கிடைத்த 7வது வெற்றி ஆகும். அந்த அணி 21 போட்டிகளில் விளையாடி 11 தோல்விகளை பெற்ற நிலையில் இந்த வெற்றி ஒரு ஆறுதல் ஆகும்

நேற்றைய போட்டியின் முடிவுக்கு பின் டெல்லி, பெங்கால், ஹரியானா, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. இதில் டெல்லி, பெங்களூரு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments