Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (07:41 IST)
கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் காலிறுதிக்கு இந்தியாவின் பிவி சிந்து தகுதி பெற்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
சுவிட்சர்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது பாசெல் என்ற நகரில் நடைபெற்று வருகிறது இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரண்டாவது சுற்று நடைபெற்றது. இந்த சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பிவி சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட்டில் அமெரிக்க வீராங்கனை அரிஸ் வாங் என்பவரை தோற்கடித்தார். இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு முன்னேறினார்
 
அதேபோல் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-10, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் தாமஸ் பிரான்ஸின் ரோக்சலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
 
மேலும் இந்திய வீரர்கள் சாய் பிரனீத், அஜய் ஜெயராம் ஆகியோரும் அடுத்த சுற்றை எட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,  
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments