Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டுக்கு ஒரு சின்ன அட்வைஸ்தான் சொல்லப்போறேன்… டிராவிட் கருத்து!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (11:26 IST)
இந்திய அணியின்  விக்கெட் கீப்பர் பண்ட் தென் ஆப்பிரிக்கா தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறார்.

தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதுமே அவசரப்பட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார் பண்ட். அதிலும் நேற்றைய ஆட்டத்தில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு அதனால் டிரிகர் ஆகி ரபாடாவின் பந்தை இறங்கி அடிக்க முயன்று மிகவும் மோசமாக தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘நான் சென்ஸ். அவர் இயல்பான அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடினார் என்று இன்னும் எத்தனை நாளுக்கு அர்த்தமற்று பேசப்போகிறார்கள். ரிஷப் பண்ட் என்றைக்கு சென்ஸிபிளாக ஆடப்போகிறார்’ என்ற கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.

இந்நிலையில் பண்ட்டின் ஆக்ரோஷமான ஆட்டம் பற்றி பேசியுள்ள பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ‘பண்ட் ஒரு தனித்துவமான பேட்டிங் மூலம் ரன்களை சேர்த்து வருகிறார். அவரின் அந்த ஆட்டப்பாணி அவருக்கு வெற்றியையும் கொடுத்துள்ளது. அவரது இயல்பான ஆட்டத்துக்கு இடையூறு இல்லாத வகையில் அவருக்கு சிறு அறிவுரைகள் வழங்கப்படும். அது பெரும்பாலும் அவரின் ஷாட்கள் குறித்தும், எந்த நேரத்தில் எந்த ஷாட் ஆடுவது என்பது பற்றியும் இருக்கும். அவரின் இயல்பான ஆக்ரோஷ ஆட்டத்தை மாற்ற சொல்லப்போவதில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments