Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியில் குறுக்கிட்ட மழை: 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் பாகிஸ்தான்

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:03 IST)
5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் நேற்று இங்கிலாந்தில் உள்ள செளதாம்டன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது
 
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் அபித் அலி களமிறங்கினார்கள். ஷான் மசூத் ஒரே ஒரு ரன்னில் அவுட்டாகியதால் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அடைந்தது. இதனை அடுத்து கேப்டன் அசார் அலி 20 ரன்களுக்கு அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரரான அபித் அலி அரைசதம் அடித்த நிலையில் 60 ரன்களுக்கு அவுட் ஆனார். அசாத் சபிக் 5 ரன்களிலும், பவத் அலாம் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர்
 
தற்போது பாபர் அசாம் 25 ரன்களிலும் முகமது ரிஸ்வான் 4 ரன்கள் எடுத்தும் அவுட் ஆகாமல் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓராண்டுக்குப் பிறகு நாளை கிரிக்கெட் களம் காண்கிறார் ஷமி!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக முடிவு?

ஆஸ்திரேலிய தொடர்… கோலியின் முகத்தை முன்னிலைப் படுத்தும் ஆஸி ஊடகங்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!

சி எஸ் கே அணி என்னை எடுக்கும் என்று நம்புகிறேன்… வெளிப்படையாகக் கேட்ட தீபக் சஹார்!

அடுத்த கட்டுரையில்
Show comments