Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணிக்கு கேப்டன் யார்… முடிவுக்கு வந்த குழப்பம்!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (11:29 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை இந்த சீசனின் ஆரம்பத்தில் ரிஷப் பண்ட் வழிநடத்தினார்.

எல்லா சீசன்களிலும் கடைசி அணியாக வந்து கொண்டிருந்த டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டிவரை சென்றது. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியில் புதிய இளம் வீரர்கள் புகுத்த்தப்பட்டது, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவியை ஏற்றதும்தான். அந்த அளவுக்கு சிறப்பாக அணியை வழிநடத்தினார் ஸ்ரேயாஸ்.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பீல்டிங்கின் போது காயமடைந்தார். தோள்பட்டையில் எலும்பு இடம் மாறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதற்கிடையில் பண்ட்டின் தலைமையில் டெல்லி அணியும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பிடித்தது. கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு இப்போது செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்க உள்ளன. இந்த மீதமுள்ள போட்டிகளில் காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கேப்டன் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பண்ட்டே எஞ்சிய போட்டிகளுக்கும் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments