Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்போதும் மாஸ்க் அணியமுடியாது… ரிஷப் பண்ட் குறித்து கங்குலி கருத்து!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (16:24 IST)
பண்ட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அங்கு முகாமிட்டுள்ளது. அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வந்த இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து அவர் அணியில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றே இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் டர்ஹம் நகருக்கு செல்லும் இந்திய அணியோடு அவர் செல்லமாட்டார் என சொல்லப்படுகிறது. அவர் எப்போது இந்திய அணியோடு இணைவார் என்பதும் அறிவிக்கப்படவில்லை.இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது போல மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு சென்று சுற்றியதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘அப்போது விதிகள் மாற்றமடைந்து இருந்தன. விளையாட்டு போட்டிகளை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்க பட்டனர். எப்போதும் மாஸ்க் அணிந்து கொண்டே இருக்க முடியாது. பாதிக்கப்பட்ட வீரர் விரைவில் நலமடைவார் என நம்புகிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments