Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவேன் – மூத்த வீரர் நம்பிக்கை !

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:14 IST)
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா தான் மீண்டும் அணிக்குத் திரும்பி உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக 46 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் ராபின் உத்தப்பா. இந்திய அணியில் மிகப்பெரிய வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் ஏனோ தனக்கான இடத்தைப் பெற முடியாமல் தவித்தார். இப்போது 34 வயதாகும் இவர் மீண்டும் அணிக்குத் திரும்பி உலக்கோப்பை போட்டிகளில் விளையாடுவேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘இன்னமும் சாதிக்கவேண்டும் என்ற தீ என்னுள் இருக்கிறது. உலகக் கோப்பைப் போட்டியில் நான் விளையாடுவேன் என நம்பிக்கை உள்ளது. அதற்குக் கடவுளின் ஆசி மற்றும் அதிர்ஷ்டம் முக்கியமானது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது எனச் சொல்லவே முடியாது. அப்படி நினைத்தால் நீங்கள் உங்களுக்கே நியாயமாக இல்லை என்று அர்த்தம்.  இருக்கும் சிறிதளவு வாய்ப்பை நான் எதிர்பார்க்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments