Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதி போட்டியில் தோல்வி.. ரொனால்டோவில் அணி வெளியேற்றம்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (08:07 IST)
சவுதி சூப்பர் கப் கால்பந்தாட்ட போட்டியில் ரொனால்டோவின் அல் நசார் கால்பந்து அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அபாரமாக விளையாடிய ரொனால்டோவை மிகப்பெரிய தொகைக்கு அல் நசார் ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 ரொனால்டோவின் வருகை காரணமாக அடுத்தடுத்து பல வெற்றிகளை அல்நசார் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடர் சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் நேற்று அரையிறுதி போட்டி நடந்தது. 
 
இதில் அல் நசார் அணி அல் இத்திஹாத் என்ற அணியுடன் மோதியது. இந்த போட்டியில் அல் இத்திஹாத் அணி வீரர்கள் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து மூன்று கோல்களை போட்டனர். ஆனால் ரொனால்டோவின் அல் நசார் அணி ஒரு கோல் மட்டுமே போட்டது என்பதும் அந்த ஒரு கொலையும் ரொனால்டோ போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ரொனால்டோ இருந்தும் அல் நசாத் அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments