Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு போட்டியில் கூட விளையாடதவர்களுக்கு ரூ.5 கோடி.. பரிசுப்பணம் ரூ.125 கோடியை பிரித்தது எப்படி?

Siva
திங்கள், 8 ஜூலை 2024 (19:05 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்ற நிலையில் அந்த அணிக்கு 125 கோடி பிசிசிஐ பரிசாக கொடுத்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பணத்தை எவ்வாறு பிரித்து வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

இதன்படி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சாஹல் ஆகியோர் ஒரு போட்டியில் கூட  விளையாடாத நிலையில் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேட்டிங், பில்டிங், பௌலிங் பயிற்சியாளர்களுக்கு தலா 2.5 கோடியும், உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்,  டிரைனர்கள் ஆகியோர்களுக்கு தலா 2 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு குழுவில் உள்ளவர்களுக்கு தலா ஒரு கோடியும், ரிசர்வ் வீரர்களுக்கு தலா ஒரு கோடியும் வழங்க பிசிஐ முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி ஐசிசி சார்பில் ஏற்கனவே 20 .42 கோடி இந்திய அணிக்கு பரிசாக வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments