Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (07:57 IST)
ஆஸ்திரேலியாவின் பிரபல ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு சச்சின் தெண்டுல்கர் வழக்கு தொடர்ந்தால் சச்சினிடம் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டதால் அந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது 
 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஸ்பார்ட்டன் என்ற நிறுவனம். இந்த விளையாட்டு நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரிடம் விளம்பரம் குறித்த ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு சச்சினின் புகைப்படங்களை தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் முடிந்த பின்னரும் சச்சின் புகைப்படத்தை இந்நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை அடுத்து சச்சின் தன் படங்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று கூறியிருந்தார். ஆனாலும் இந்த நிறுவனம் அதனை கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் 
 
தன்னுடனான ஒப்பந்தம் முடிந்த பிறகும் தனது படத்தை பயன்படுத்துவதால் ஸ்பார்ட்டன் நிறுவனம் தனக்கு ரூ.14 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அந்த வழக்கில் சச்சின் கூறியிருந்தார். இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஸ்பார்டன் நிறுவனம் சச்சினிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் இதுகுறித்து கூறிய போது ’ஒப்பந்தங்களின் படி செயல்பட முடியாமல் போனதற்கு எங்கள் நிறுவனம் உண்மையில் வருந்துகிறது. சச்சின் டெண்டுல்கர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்சினையை தீர்க்க பொறுமையாக செயல்பட்ட அவருக்கு நன்றி’ என்று கூறினார் 
 
இதனை அடுத்து இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சச்சின் சம்மதம் தெரிவித்ததை அடுத்து வழக்கு சமாதானமாக முடித்து வைக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments