Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார் – சச்சின் பாராட்டிய இளம் வீரர் யார் தெரியுமா?

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (08:29 IST)
சச்சின் டெண்டுல்கர்

மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தற்காலக் கிரிக்கெட்டர்களில் தன்னைப் போல விளையாடும் வீரராக ஒருவரைத் தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ சேதங்களுக்கான நிவாரணத்துக்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களைக் கொண்ட அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்க இருக்கிறது. அதில் ரிக்கி பாண்டிங் தலைமையேற்கும் அணிக்கு சச்சின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது சச்சினிடம் தற்காலக் கிரிக்கெட்டர்களில் உங்களைப் போலவே விளையாடுபவர் யார் என்ற கேள்விக்கு சச்சின் பதிலளித்துள்ளார். அதில் ‘ நான் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா லார்ட்ஸ் போட்டியை எனது மாமனாருடன் பார்த்தேன். அப்போது தலையில் அடிவாங்கிய மார்னஸ் லபுஷான் அதன் பிறகு ஆடிய ஆட்டம் மிகச்சிறப்பானது. அவரது கால்நகர்வு துல்லியமாக உள்ளது, அதற்கு மனரீதியான உறுதி வேண்டும். நிச்சயம் அவர் ஸ்பெஷல் வீரர் என்றுதான் நான் நினைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

லபுஷான் ஆஸ்திரெலியக் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகிக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments