Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாய்னா நேவலுக்கு கொரோனா தொற்று: தாய்லாந்து தொடரில் இருந்து விலகினார்

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (12:06 IST)
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிவி சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் பாங்காங் சென்றனர் என்பது தெரிந்ததே. அவர்கள் பாங்காங்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் இன்று மலேசிய வீராங்கனை கிசானோ என்பவரை எதிர்த்து சாய்னா நேவல் விளையாட இருந்தார் 
 
போட்டி தொடங்குவதற்கு முன்பாக சாய்னா நேவாலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று அவர் மலேசிய வீராங்கனையுடன் விளையாடும் போட்டி ரத்து செய்யப்பட்டது என்பதும் இந்த தொடரில் இருந்தும் சாய்னா நேவால் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாய்னா நேவால் தாய்லாந்து நாட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments