Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு… ஐபிஎல் முழுவதும் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (08:39 IST)
ஐபிஎல் 2021 தொடர் முழுவதற்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார்.

எல்லா சீசன்களிலும் கடைசி அணியாக வந்து கொண்டிருந்த டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டிவரை சென்றது. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியில் புதிய இளம் வீரர்கள் புகுத்த்தப்பட்டது, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவியை ஏற்றதும்தான். அந்த அளவுக்கு சிறப்பாக அணியை வழிநடத்தினார் ஸ்ரேயாஸ்.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பீல்டிங்கின் போது காயமடைந்தார். தோள்பட்டையில் எலும்பு இடம் மாறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதனால் அவர் சில மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது. ஸ்ரேயாஸின் நீக்கம் டெல்லி அணிக்கு மிகபெரும் பின்னடைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அணியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments