Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்தான் நீக்கப்படுவார்… விவிஎஸ் லக்‌ஷ்மன் கருத்து!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (17:27 IST)
மும்பை டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கோலி வந்த பிறகு அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்தான் நீக்கப்படுவார் என விவிஎஸ் லக்‌ஷ்மன் கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் டெஸ்ட்டில் ஓய்வில் இருக்கிறார். இதனால் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் 170 ரன்களை சேர்த்து தனது தேர்வு சரிதான் என நம்பவைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த போட்டியில் கோலி வரும் போது அவருக்கு வழிவிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே மோசமான பார்மில் இருக்கும் துணைக் கேப்டன் ரஹானேதான் வழிவிட வேண்டி இருக்கும் என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டியே ரஹானேவின் கடைசி போட்டியாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது.

ஆனால் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்‌ஷ்மன் ஸ்ரேயாஸ் ஐயரே அடுத்த போட்டியில் நீக்கப்படுவார் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் ‘ஒரு வீரர் இல்லாத போது களமிறக்கப்படும் வீரர் அந்த வீரர் வந்தவுடன் வழிவிடவேண்டும். அதுதான் கிரிக்கெட்டின் எழுதப்படாத மரபு. அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் மும்பை டெஸ்ட்டில் அவர்தான் நீக்கப்படுவார். ராகுல் டிராவிட்டும் கோலியும் ரஹானேவை விட்டுக்கொடுப்பார்கள் என நான் நினைக்கவில்லை. அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்புக் கொடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments