Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வெற்றி யாருக்கு? கையைப் பிசையும் கங்குலி!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:01 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. அந்த போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஆர்வம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பது பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.

அதில் “இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகள். அதில் எந்த அணி வெற்றி பெறும் என்பதைப் பற்றி கூற முடியாது. போட்டி நடக்கும் நாளில் நன்றாக விளையாடுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும். இந்திய அணியில் அக்சர் படேலுக்கு இடம் கொடுத்திருப்பது நல்ல முடிவாகும். அவரால் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யவும் முடியும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments