Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொனால்டோவை அசிங்கமாக பேசிய கொரிய வீரர்? – கால்பந்து மைதானத்தில் பரபரப்பு!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (12:50 IST)
நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோவை கொரிய வீரர் திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் ரவுண்ட் ஆன் 16 எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போர்ச்சுக்கல் அணி ரவுண்ட் ஆன் 16க்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் நேற்று தென் கொரிய அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது. எனினும் தரவரிசையில் போர்ச்சுக்கல் முதலிடத்தையும், தென்கொரிய அடுத்த இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த போட்டியின்போது 45 நிமிடங்களுக்கு பிறகு அளிக்கப்பட்ட ஓய்வு சமயத்தில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டஸ் புகார் அளித்துள்ளார். ரொனால்டோவை பார்த்து அந்த வீரர் ‘சீக்கிரம் போ’ என கத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரொனால்டோ “நான் அவரை அமைதியாக இருக்க சொன்னேன். எனக்கு கட்டளையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை’ என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

போர் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்..பிசிசிஐ அதிரடி முடிவு?

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments