Webdunia - Bharat's app for daily news and videos

Install App

204 ரன்கள் இலக்கு – இலங்கையை வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (20:01 IST)
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியில் இலங்கை 203 ரன்களுக்கு ஆட்டமிழந்து 204 ரன்களை தென்னாப்பிரிக்காவுக்கு இலக்காக கொடுத்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போதே இலங்கை உஷாராகி இருக்க வேண்டும். முதல் ஓவரின் முதல் பந்திலேயே இலங்கை கேப்டன் கருணரத்னே அவுட் ஆனார். அப்போதே தென்னாப்பிரிக்க வலுவான தயார் நிலையில் இருப்பது தெரிந்து விட்டது. பிறகு ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சுமாரான ஆட்டத்தையே கொடுத்தார்கள். தென்னாப்பிரிகாவின் அதிவேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை 50 ஓவர்கள் முடிய 3 பந்துகள் மிச்சம் இருந்த நிலையில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்தை அசால்ட்டாக வென்ற இலங்கையிடமிருந்து ரசிகர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. தற்போது 204 ரன்களை இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்கா இறங்கியிருக்கிறது. இலங்கையிலும் மலிங்கா போன்ற பந்துவீச்சு சூரர்கள் இருக்கிறார்கள் என்பதால் 180 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்காவை சுருட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments