ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

Siva
திங்கள், 31 மார்ச் 2025 (17:29 IST)
இலவச டிக்கெட் கேட்டு மிரட்டுவதாகவும், இந்த மிரட்டல் தொடர்ந்தால் ஐதராபாத் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம் என்றும் ஹைதராபாத் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஐபிஎல் சீசன் சமீபத்தில் தொடங்கி, விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அதிக அளவிலான இலவச டிக்கெட் கேட்டுக் கொண்டு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக ஹைதராபாத் அணி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
 
மேலும், இது குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்தால், ஹைதராபாத் மைதானத்தில் விளையாடாமல் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஆனால், இதனை மறுத்துள்ள ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து எந்தவிதமான கடிதமும் நிர்வாகத்திடம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

அடுத்த கட்டுரையில்
Show comments