Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் டிவில்லியர்ஸ் சூர்யகுமார் யாதவ் – ஹர்பஜன் சிங் ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:38 IST)
இந்திய அணிக்காக சூர்யக்குமார் யாதவ்வை தேர்வு செய்யாதது குறித்து சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்காக வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட போது. இதில் வருண் சக்கரவர்த்தி, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மும்பையை சேர்ந்த சூர்யகுமார் தேர்வு செய்யப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இப்போது அதுபற்றி விரிவாக பேசியுள்ள ஹர்பஜன் சிங் ‘மும்பை அணிக்கு மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். பல்வேறு போட்டிகளில் மிகவும் பொறுப்புடன் பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், கவர் ட்ரைவ், ஓவர் கவர் என அனைத்து ஷாட்களையும் சிறப்பாக ஆடுவார்.  அதிபோல வேகப்பந்து மற்றும் சுழல்பந்து என இரண்டையும் சிறப்பாக எதிர்கொள்கிறார். என்னை பொறுத்தவரை அவர் இந்தியாவின் டிவில்லியர்ஸ். சூர்யகுமாரை நிச்சயம் ஆஸ்திரேலியத் தொடருக்குத் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இந்திய அணிக்காக விளையாடுவதை யாராலும் தடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments