Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சாதனை படைக்க நினைத்தேன் – 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (22:45 IST)
ஒலிம்பிக் சாதனையை முறியடிக்க நினைத்தேன் முடியவில்லை என ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியா சார்பில் மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்திய பாட்மிண்ட வீராங்கனை பிவி.சிந்து மகளிர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று சரித்திரத்தில் முக்கிய நாள் என இந்தியா மக்கள் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய விளையாட்டுத்துறை சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு சாதனை நீரஜ் சோப்ராவால் இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா  ஒலிம்பிக் அதெலெட்டிக்கில் முதல் தங்கம் வென்று சாதித்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் 65 ஆம் இடத்திலிருந்து 47 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தற்போது பேட்டியளித்த நீரஜ் சோப்ரா கூறியுள்ளதாவது: ஈட்டில் எறிதலில் 90.57 மீட்டர் தூரம் வீசி முந்தைய ஒலிம்பிக் சாதனையை முறியடிக்க  முயற்சித்தேன். இருப்பினும் என்னுடைய சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். ஆனால் இலக்கை அடையவில்லை. விரைவில் அந்த இலக்கை அடைவேன் எனத் தெரிவித்துள்ளார்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments