Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிம் பெய்னை தொடர்ந்து பாலியல் சிகிச்சையில் சிக்கிய அவரின் குடும்ப உறுப்பினர்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:10 IST)
டிம் பெய்ன் பாலியல் தொல்லைக் கொடுத்த பெண்ணுக்கே அவரின் தங்கை கணவரும் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு முதலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் டிம் பெய்ன். இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதே சக பெண் ஊழியருக்கு பாலியல் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக இவர்மீது புகார் இருந்தது. இந்நிலையில் தற்போது தனது கேப்டன் பொறுப்பை பெய்ன் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான்கு வருடங்கள் முன்னதாக சக பெண் ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆனால் அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம். ஆனால் தற்போது அந்த குறுஞ்செய்தி பொதுவெளியில் பகிரப்பட உள்ளதாக அறிந்தேன். இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சையில் இப்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. டிம் பெய்னின் தங்கை கணவரும் டாஸ்மானியா அணியின் பயிற்சியாளருமான ஷனான் டப் என்பவரும் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவரை டாஸ்மானியா அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டு சம்பவங்கள் வெளியாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பெரிதும் பாதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்