Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் டி 20 உலகக்கோப்பையில் விளையாடுவது சிரமம்… ஆஸி கேப்டன் டிம் பெயன் கருத்து!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (11:56 IST)
ஆப்கானிஸ்தான் அணி டி 20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு சாத்தியம் இல்லை என ஆஸி டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது உலகக் கவனம் முழுவதையும் அந்த நாட்டின் மீது விழ வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தாலிபன்கள் தடை விதித்துள்ளனர்.
இதுபற்றி பேசியுள்ள ஆஸி டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் ‘தாலிபன்கள் இந்த முடிவால் மற்ற நாடுகள் ஆப்கன் ஆண்கள் அணியோடு கிரிக்கெட் விளையாட மறுக்கலாம். இதனால்தான் ஆஸி- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆப்கன் அணி டி 20 உலகக்கோப்பையில் விளையாடுவதும் சிரமம்தான்’ எனக் கூறியுள்ளார்.

ஐசிசி விதிகளின் படி டெஸ்ட் விளையாட அங்கீகாரம் பெற்ற எல்லா நாடுகளும் பெண்கள் கிரிக்கெட் அணிகளையும் கொண்டிருக்கவேண்டும்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கிய வீரர் விலகலால் ஆர் சி பி அணிக்குப் பெரும் பின்னடைவு…!

பிசிசிஐ வேண்டுகோளை ஏற்காத கோலி…. டெஸ்ட் ஓய்வில் உறுதியில் இருக்கிறாரா?

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments