Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

Siva
புதன், 16 ஏப்ரல் 2025 (14:07 IST)
2028-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்கள் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுகிறது என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் இந்த ஒலிம்பிக்ஸ் விழாவில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கும் இடம் தெற்கு கலிஃபோர்னியாவின் போமோனா நகரம் ஆக்கும். இங்கே உள்ள ஃபேர்கிரௌண்ட்  எனப்படும் பகுதியில்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பொதுவாக, ஃபேர்கிரௌண்ட் பகுதிகள் பொது நிகழ்ச்சிகள், கல்வி கண்காட்சிகள், வணிக நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு அம்சங்களுக்கு பயன்படுத்தப்படும் இடமாகவே அறியப்படுகிறது. ஆனால், இங்கு இதுவரை கிரிக்கெட் விளையாட்டிற்கென அமைந்துள்ள தரைப் பகுதியில் ஒரு பிட்சும் அமைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் போட்டிகள் தொடங்க இன்னும் 3 ஆண்டுகள் இருப்பதால் அதற்குள் பிட்ச் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments