Webdunia - Bharat's app for daily news and videos

Install App

101 பந்துகளுக்கு 6 ரன்கள்: கவாஸ்கர், டிராவிடுக்கு இணையாக விளையாடும் விஹாரி!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (11:36 IST)
கவாஸ்கர், டிராவிடுக்கு இணையாக விளையாடும் விஹாரி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது 
 
407 என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி சற்று முன் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு தேவை இன்னும் 108 ரன்கள் இருக்கும் நிலையில் ஐந்து முக்கிய விக்கெட்டுகள் விழுந்து விட்டதால் போட்டியை டிரா செய்ய இந்திய அணியினர் முடிவு செய்து உள்ளனர் 
 
இதனை அடுத்து தொடர்ச்சியாக பல ஓவரக்ள் மெய்டன் ஓவர்கள் ஆகி வருகிறது என்பதும் விஹாரி 101 பந்துகளுக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து கட்டை போட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஒரு டெஸ்ட் போட்டிகளை டிரா செய்வதில் சுனில் கவாஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் வல்லவர்களாக இருந்த நிலையில் தற்போது விஹாரி அவர்களுக்கு இணையாக இந்த போட்டியை டிரா செய்ய கடுமையாக போராடி வருகிறார். இன்னும் சில நிமிடங்களில் இந்த போட்டி முடிவடைய உள்ள நிலையில் டிராவை நோக்கி தான் இந்த போட்டி சென்று கொண்டிருக்கிறது பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி படைக்காத மோசமான சாதனை… இந்த ஆண்டில் நடந்திடுமோ?

வைபவ் சூர்யவன்ஷியால் இன்னும் ஓராண்டுக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது?... ஏன் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பின்னடைவு… இளம் வீரர் விலகல்!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் சொத்தாக அவர் இருப்பார்… இளம் வீரரைப் பாராட்டிய தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments