Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் மனதில் என்ன இருக்கு என்று அவருக்கு மட்டுமே தெரியும் – தோனிக்குக் கோஹ்லி புகழாரம்..’

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (09:48 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் வெற்றிக்குப் பிறகு கேப்டன் கோஹ்லி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தோனியைப் புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. 299 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி சென்ற இந்திய அணியில் கேப்டன் கோஹ்லி 104 ரன்களும் முன்னாள் கேப்டன் தோனி 55 ரன்களும் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

கோஹ்லி இருக்கும் வரை ஆமைவேகத்தில் விளையாடி ரசிகர்களின் பொறுமையை சோதித்த தோனி கோஹ்லி அவுட் ஆனபின் விஸ்வரூபம் எடுத்து அதிரடியாக விளையாண்டார். இதனால் இந்திய அணி 4 பந்துகள் மீதமிருக்கும்போதே வெற்றி இலக்கை எட்டியது.

சிறப்பாக விளையாடி சதமடித்த விராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது தோனியின் ஆட்டம் பற்றி ‘ தோனியின் மனதில் என்ன இருக்கு என்பதை தோனி மட்டுமே அறிவார். அவர் ஆட்டத்தைப் பற்றி ஒருக் கணக்கைப் போட்டு வைத்திருப்பார். சிலப் பெரிய இன்னிங்ஸ்களுக்காக அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள கொஞ்சநேரம் எடுத்துக்கொள்வார். அவர் எப்போதையும் போல இப்போதும் தன்னைக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்.’ எனப் புகழாரம் சூட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments