Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஒரே ஒரு சதத்தில் தான் யாரென்று உலகிற்கு நிரூபித்த விராட் கோலி!

ஒரே ஒரு சதத்தில் தான் யாரென்று உலகிற்கு நிரூபித்த  விராட் கோலி!
, ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (16:41 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 25வது டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பூர்த்தி செய்தார். 


 
இந்த ஒரு சதத்தால் கோலி செய்துள்ள சாதனைகளை சற்று பார்ப்போம்.
 
இது ஆஸ்திரேலியாவில் விராட் கோலி அடித்திருக்கும் 10வது சதமாகும். ஆஸ்திரேலியாவில் வேறு நாட்டு வீரர் அடித்த அதிக சதம் இதுதான். இதற்கு முன்னர் இங்கிலாந்தின் ஜாக் ஹாப்ஸ் மற்றும் டேவிட் கோயெர் ஆகியோர் 9 சதங்கள் அடித்திருந்தனர். 
 
ஆஸ்திரேலியாவில் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலிக்கு இது 6வது சதம். இதில் சச்சின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . 
 
ஆஸ்திரேலியாவில் அடித்த 6 டெஸ்ட் சதங்களில் கோலி கேப்டனாக இருந்த போது 4 சதங்கள் அடித்துள்ளார். 
 
ஒரு கேப்டனாக அனைத்து ரக கிரிக்கெட்டிலும் சேர்த்து கோலி இதுவரை 34 சதங்கள் அடித்துள்ளார். 

webdunia

 
குறைந்த இன்னிங்சில் 25 சதங்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 
 
4வது வீரராக களம் இறங்கி 5 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற பெருமை கோலி வசம் வந்தது. 
 
இது பெர்த் மைதானத்தில் கோலி அடித்த முதல் சதமாகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் !கை கொடுத்த கோலி: கரை சேருமா இந்தியா...