Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதா ? – வக்கார் யுனிஸ் சர்ச்சைக் கருத்து !

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (18:38 IST)
நேற்றையப் போட்டியில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்றது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியையே சந்திக்காத அணி என்ற கிரீடத்துடன் வலம் வந்த இந்திய அணி நேற்று இங்கிலாந்திடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக்கவ்வியுள்ளது. 339 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி இறுதி ஓவர்களில் ரன்கள் குவிக்க முடியாமல் ரன்களை பொறுக்கியது அனைவருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அதிலும் தோனியும் கேதார் ஜாதவ்வும் இறுதி 5 ஓவர்களில் ஆமை வேகத்தில் ஆடியது இந்திய ரசிகர்களுக்கே கோபத்தை வரவைத்தது. இதையடுத்து இந்தியா வேண்டுமென்ற இங்கிலாந்திடம் தோற்றதாக பாகிஸ்தான் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான வக்கார் யுனிஸ் ’ வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்களை தீர்மானிக்கும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்கிறதோ இல்லையோ ஆனால் ஒரு விஷயம் உறுதியாகிவிட்டது. சில சாம்பியன் வீரர்களின் நேர்மை சோதிக்கப்பட்டது. அதில் அவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார். வக்கார் யுனிஸின் இந்த டிவிட் இந்தியா வேண்டுமென்றே பாகிஸ்தானிடம் தோற்றது போன்ற தோற்றத்தை உருவாக்குவதாக இந்திய ரசிகர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments