Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மித்தை அடுத்து வார்னரும் நீக்கம்: சன் ரைசஸ் அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (14:21 IST)
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ராயல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஸ்டீவன் ஸ்மித் நேற்று முன் தினம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட்டார். அவருக்கு பதிலாக தற்போது ரஹானே அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்

இந்த நிலையில் சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னரும் சற்றுமுன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சன்ரைசஸ் அணியின் கேப்டனாக தவான் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு ஐ.பி.எல். உட்பட எந்த போட்டிகளிலும் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளதால் இருவரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த ஷேன் வார்ன்!

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments