Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் ஓவரில் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து

Webdunia
வியாழன், 30 மே 2019 (15:09 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே சற்றுமுன் தொடங்கிய நிலையில் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் இங்கிலாந்து அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது
 
முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேஜே ராய் மற்றும் பெயர்ஸ்டோ களமிறங்கிய நிலையில் பெயர்ஸ்டோ இரண்டாவது பந்தில் டீகாக் பந்தில் அவுட் ஆனார். 
 
இன்றைய இங்கிலாந்து அணியில் ஜேஜே ராய், பெயர்ஸ்டோ, ரூட், மொர்கன், பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிரிஸ் வோக்ஸ், அதில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் லியாம் பிளங்கட் ஆகியோர் உள்ளனர். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியில் ஆம்ல, டீகக், மார்க்ரம், டூபிளஸ்சிஸ், டூசன், டுமினி, ஃபிலுவாக்ய, பிரெடாரிஸ், ரபடா, நிகிடி மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.
 
சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments