Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய மகளிர் அணி சாம்பியன்

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (21:30 IST)
உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய இறுதி போட்டி இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. 
 
இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரானி ரம்பால் 3வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனை சமன்செய்யும் வகையில் ஜப்பான் வீராங்கனை கனோன் மோரி 11வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர், 45வது மற்றும் 60ஆவது நிமிடங்களில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் என்ற வீராங்கனை அசத்தலாக இரண்டு கோல் அடித்து இந்திய அணி 3-1 என்ற முன்னிலைக்கு உதவினார். அதன்பின்னர் ஜப்பான் வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை என்பதால் இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்று இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் பெற்றது
 
இந்த வெற்றியின் மூலம் வரும் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments