Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது எனக்கு முக்கியமே இல்லை... ஸ்ருதி ஹாசனுக்கு பெரிய விசில் போடுங்கோ!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (16:01 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.

சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்ப்போது எந்தவித டென்க்ஷனும் இன்றி சிங்கிள் பெண்ணாக ஜாலியாக சுற்றி வருகிறார். கொரோனா லாக்டவுன் சமயம் என்பதால் உடற்பயிற்சி செய்வது, பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை
வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ருதி ஹாசன் "கொரோனா ஊரடங்கு நேரத்தை வீணாக்காமல்  வீட்டு வேலை, சமையல், இசை என்று கழிக்கிறேன். கூடவே கதை, கவிதையும் எழுதுகிறேன் என்றார்.

மேலும், எனது கையில் தற்ப்போது மூன்று படங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துகிறேன். கூடவே  இசைபணிகளுக்காக அடிக்கடி லண்டனுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. சினிமா, இசை என இரண்டிலும் அதிகம் ஈடுபாட்டுடன் இருந்து வருகிறேன். நான் சம்பளம் பற்றி யோசிப்பது இல்லை. அது முக்கியமான விஷயமும் இல்லை. சினிமா தொழிலாளர்கள் நிறைய பேர் இந்த ஊரடங்கில் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் முக்கியம். என அக்கறையுடன் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments