ஆப்பிள் அல்வா செய்ய...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
ஆப்பிள் - 2
சர்க்கரை - 4 மேஜைக்கரண்டி 
நெய் - 5 மேஜைக்கரண்டி
கோதுமை மாவு - 1க‌ப் 
முந்திரிப் பருப்பு - 10
கேசரிப் கலர் - 1/2 சிட்டிகை
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

 
செய்முறை:
 
ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய்  ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
 
அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் கோதுமை மாவு, ஆப்பிள் துருவலை சேர்த்து  அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகும் வரை நன்கு கிளறவும். நன்கு வெந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், கேசரிப் கலர், சர்க்கரை, இரண்டையும் சேர்த்து ஏலக்காய் தூள் தூவி அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
 
அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான  ஆப்பிள் அல்வா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments