Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொறுமொறுப்பான மற்றும் ஜூஸியான ஜிலேபி செய்வது எப்படி!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (15:15 IST)
ஜிலேபி செய்ய தேவையான பொருட்கள்:
 
உளுந்தம் பருப்பு- 250 கிராம் 
அரிசி- 30 கிராம்
சீனி - 1 கிலோ
லெமன் கலர் பவுடர் - 5 சிட்டிகை
ரோஸ் ஸெண்ட்ஸ் - சிறிதளவு 
டால்டா, நெய் அல்லது ரீபைண்ட் ஆயில்
 
செய்முறை
 
அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு தண்ணீர் ஊற்றி எசென்ஸ் கலர் சேர்த்து ( தண்ணீர் சீனி மூழ்கும் வரை ஊற்றவும்) அடுப்பில் வைக்கவும். 
 
அதே நேரம் உளுந்தம் பருப்பு அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும். இரண்டும் ஊறியதும் தண்ணீர் லேசாக தொட்டுக்கொண்டு மைய்ய அரைத்துக்கொள்ளவும்.
 
வாணலியில் டால்டா அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவு எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி சுற்றவும். 
 
நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனி பாகில் போடவும். பின்னர் நன்கு சீனி ஜிலேபியில் ஊறியதும் ருசித்து சாப்பிடலாம்.
 
குறிப்பு: மாவு குழைவாக இருந்தால் அதனுடன் 1 கரண்டி மைதா மாவை சேர்த்துக்கொள்ளலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments